பிரதம மந்திரி செய்தி

எமது தாய்நாடு பண்டைய காலம் முதலே இயற்கை வளங்களினால் சூழ்ந்ததொரு தேசமாகும். அவ்வாறானதொரு நாட்டில் வாழ்வதற்கு கிடைத்தமை எனக்கும் உங்களுக்கும் கிடைத்த ஒரு பாக்கியமாக கருதுகிறேன். மேற்கத்தேய நாடுகள் எம் தாய்நாட்டின் மீது ஒரு பார்வையை கொண்டிருக்க காரணம் எமது நாட்டின் இயற்கை வளங்கள், இயற்கை அழகு, புராதன சொத்துக்கள் மற்றும் உயர்கலாசாரம் என்பவையே ஆகும்.

உலகின் ஏனைய நாடுகளை விட எமது பூமியில் உள்ள இரத்தினக்கற்கள் மதிப்பு மிகுந்த சொத்தாகும். பண்டைய காலம் முதல் எமது தாய்நாட்டில் காணப்டும் இரத்தினக் கற்களுக்கு பாரிய கேள்வியொன்று கணப்படுகின்றமை நாம் அனைவரும் அறிந்த விடையமாகும். அதுமாத்திரமன்றி அது உலகளாவிய ரீதியில் மிகவும் பிரெலமாகும்.

எமது நாட்டின் இரத்தினம் மற்றும் தங்க ஆபரண துறையை உள்நாட்டில் போன்றே சர்வதேச சந்தையையும் கவரும் வகையில் மேம்டுத்துவது நம் அனைவரதும் கைடமயாகும். சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைய தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவான வகையில் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சியை நாம் மிகவும் பாராட்டுகின்றேன்.

அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சியை நாம் மிகவும் பாராட்டுகின்றேன்.
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபை எதிர்காலத்தில் அவர்களது உற்பத்தி இலக்கை நோக்கி பயணித்து நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு சிறந்த பங்களிப்பை பெற்றுக் கொடுப்பதற்கான வலிமையும் தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கின் றேன்.